மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 6544
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% ல் இருந்து 28% ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments