பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தும் வகையில் மின்வாகனக் கொள்கையை அறிவித்தது மகாராஷ்டிர அரசு
பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தும் வகையில், மகாராஷ்டிரா அரசு மின்வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 10 சதவீதமும், பொதுப்போக்குவரத்து வாகனங்களில் 25 சதவீதமும் மின்வாகனங்களாக இருக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் 2500 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மகாராஷ்டிர அரசு மானியம் வழங்க உள்ளது. மகாராஷ்டிர அரசின் மின்வாகனக் கொள்கைக்கு, மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட் மோட்டார்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ரிவோல்ட் பைக்குகளுக்கு மாநில அரசு ஏற்கெனவே 10 ஆயிரம் ரூபாய் மானியம் தரும் நிலையில், டிசம்பர் இறுதிக்குள் வாங்குபவர்களுக்கு early-bird incentives என்ற பெயரில் மேலும் 15 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதுதவிர மின்வாகன தயாரிப்பாளர்களுக்கான FAME II மானியமாக ஒரு பைக்கிற்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஒரு ரிவோல்ட் பைக் 64 ஆயிரம் ரூபாய் மானியமாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments