இந்தியா ஒப்புதல் தெரிவித்தவுடன் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக விரைந்து அனுப்ப தயார் - அமெரிக்கா
இந்தியா சட்டபூர்வ வழிவகைகளை ஆராய்ந்து சம்மதம் தெரிவித்தவுடன், கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக விரைந்து அனுப்ப தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அண்மையில், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் நாடுகளுக்கு அமெரிக்கா தடுப்பூசிகளை அனுப்பியது. ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தியாவுக்கு மட்டும் இன்னும் அனுப்பப்படவில்லை.
இந்நிலையில், தடுப்பூசி கொடைகளை பெறுவதற்குரிய சட்ட வழிவகைகளை ஆராய்வதற்கு இந்தியாவுக்கு கால அவகாசம் தேவை என்றும், அதை இந்தியா செய்து முடித்து சம்மதம தெரிவித்தவுடன் தடுப்பூசிகளை அமெரிக்கா விரைந்து அனுப்பி வைக்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
தடுப்பூசிகளை அனுப்புவதற்கு, உலக சுகாதார நிறுவனத்தின் முன்முயற்சியில் உருவாகியுள்ள கோவேக்ஸ் (COVAX) நிறுவனத்துடனும் இந்தியா ஆலோசித்து வருவதாக நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
Comments