தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்வமுடன் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி செல்லும் பொதுமக்கள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருவதால் சிறப்பு முகாம்களில் கூட்டம் அலைமோதுகிறது.
3 நாட்களுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் 41 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 63 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி சென்றனர்.
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
மாவட்டத்தில் 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், கலையரங்கம் வளாகத்தில் 750 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, இதனால் அங்கு அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருந்த நிலையில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் தங்களுக்கும் டோக்கன் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Comments