தென்னாப்பிரிக்காவில் கலவரம் : 75 பேர் பலி கடைகள் சூறை - தீவைப்பு

0 3744
தென்னாப்பிரிக்காவில் கலவரம்: 75 பேர் பலி கடைகள் சூறை - தீவைப்பு

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் 5 நாட்களாக நீடிக்கும் வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. 9 ஆண்டு கால பதவிக் காலத்தில், தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக இவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து ராஜினாமா செய்த அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரு வணிக நிறுவனங்களில் புகுந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு எரித்தனர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார். இறுதியில் அந்த வணிக வளாகம் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

தொடர்ந்து வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்த கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தென்னாப்பிரிக்காவில் கலவரம் பரவி வருவதால் 75 ஆயிரம் வீரர்கள் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments