பதினைந்து மாதங்களுக்குப் பின் இன்று கூடுகிறது மத்திய அமைச்சர்கள் நேரில் பங்கேற்கும் அமைச்சரவைக் கூட்டம்

0 2265

ஓராண்டுக்கும் மேலாக காணொலி வாயிலாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்றுமுதன் முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 8ம் தேதி முதன் முறையாக காணொலி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி இன்று அவர்களை நேராக சந்திக்க உள்ளார். காலையில் 11 மணிக்கு இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து அமைச்சரவைக் குழுவுடன் மாலை 4 மணிக்கு பிரதமர் காணொலி வாயிலாக பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments