உத்தரகாண்டில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரை ரத்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரை 2வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 3வது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதால் இந்த ஆண்டும் கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியுடன் லாரிகளில் கங்கை நீரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்வர் யாத்திரை என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதாகும். இந்த ஆண்டு கன்வர் யாத்திரை வருகிற 25ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Comments