ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீப்பிடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

0 2544

ஈராக்கில், கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

நஸிரியா நகரில் செயல்பட்டு வந்த அல் ஹூசைன் கொரோனா தனிமைப்படுத்தல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் நெருப்பு பற்றியதில் அவை வெடித்துச் சிதறின.

மருத்துவமனையில் தீயில் சிக்கியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 13 பேர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நஸிரியா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் பாக்தாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments