கொரோனா 3வது அலை தாக்கும் என்று வல்லுநர்கள் கணிப்பு : தீவிரத்தை மக்கள் புரிந்து செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா 3வது அலை தாக்கும் என்ற நிபுணர்களின் கணிப்பை, ஏதோ வானிலை அறிவிப்பை போல மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், 3வது அலை தொடர்பான கணிப்புகளை மிகவும் தீவிரமாக மக்கள் எடுத்துக் கொண்டு, பொறுப்புடன் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.
நாட்டின் பல்வேறு இடங்களில், முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொரோனா 3வது அலை இந்தியாவில் தாக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கேட்டுக்கொண்டார்.
Comments