வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்தை உண்டாக்கும்..! - உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி
இரண்டு வெவ்வேறு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்தான போக்கு என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை கலந்து போடுவதின் செயல்திறன், தாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மட்டுமே நடந்து வருவதாகவும், இதற்கான நிலையான தரவுகளோ, ஆதாரங்களோ நம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து மக்களே தீர்மானிக்கக் கூடாது. அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments