தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற, காங். பொறுப்பாளரான விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு ரூ.50 கோடி லஞ்சம்?

0 3030
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற, காங். பொறுப்பாளரான விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு ரூ.50 கோடி லஞ்சம்?

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ரேவந்த் ரெட்டியை நியமிக்க,  அம்மாநில மேலிட பொறுப்பாளரும் விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் 50 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கௌசிக் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹசூராபாத் இடைத்தேர்தலில் போட்டியிட, ஆளும் டிஆர்எஸ் கட்சி தனக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக, காங்கிரஸ் செயலாளர் கௌசிக் ரெட்டி, தொலைபேசியில் உரையாடியது போன்ற ஆடியோ ஒன்று வெளியில் கசிந்தது. இந்த ஆடியோ குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு கௌசிக் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில்தான், சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கௌசிக் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூருக்கு 50 கோடி ரூபாய் கொடுத்து, ரேவந்த் ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவராகியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள மாணிக்கம் தாகூர், கவுசிக் ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY