நேபாள பிரதமராக ஷேர் பகதூர் டியூபா இன்று பதவியேற்பு..! அந்நாட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து நடவடிக்கை
நேபாளத்தின் பிரதமராக ஷேர் பகதூர் டியூபா இன்று பதவியேற்கிறார்.
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற கீழவையை கலைத்து, நவம்பர் மாதம் தேர்தல் நடத்த அதிபர் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிபர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.
நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தியுபாவை புதிய பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் வரும் 18-ஆம் தேதிக்குள் நாடாளுமன்ற அவையை கூட்ட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை அடுத்து புதிய பிரதமராக ஷேர் பகதூர் டியூபா இன்று பதவியேற்கிறார்.
Comments