ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

0 2676
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடி அண்மையில் ஆய்வு செய்துள்ளார்.

நமது வீரர், வீராங்கனைகளுக்கு முழு மனத்துடன் நாட்டு மக்கள் ஆதரவு அளிக்குமாறும் பிரதமர் மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் இருந்து மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments