மேகதாதுவில் அணைகட்டும் முயற்சி..! கர்நாடக அரசுக்கு கண்டனம்

0 2003

மேகதாது திட்டத்திற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, அணைகட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று வழங்குவது என்றும், அதன்பிறகு, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments