செல்போன் பேச்சு மகள் தலையில் ஆட்டுக்கல்லால் நச்..! குடிக்கு அடிமையான தாய் ஆவேசம்

0 5127

மேட்டுப்பாளையம் அருகே 13 வயதில் மகள் இருக்கும் நிலையில் இரவெல்லாம் ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை ஆட்டுக்கல்லைபோட்டு தாயே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி . கணவனை இழந்த அவர் தனது மகள் நதியாவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் . இவர்களுக்கு 13 வயது மகளும்,12 வயது மகனும் உள்ளநிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சரவணகுமார் இறந்த பின்னர், நதியா வேறு வேறு ஆண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அடிக்கடி செல்போனிலேயே பேசி கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அவரது மாமியார் வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகின்றது.

தாய் வீட்டுக்கு வந்த நதியா, தனிமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரவெல்லாம் மணிக்கணக்கில் பேசுவதோடில்லாமல், ஆண் நண்பர்களுடன் வெளியில் சென்று வரும் அளவுக்கு சென்றுள்ளார்

அந்த நண்பர்கள் மூலமாக நதியாவுக்கு மது, அருந்துவது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது. மகள் தனது வீட்டுக்கு வருவதற்கு முன்புவரை தாய் நாகமணியும் மதுவுக்கு அடிமையாகி சுதந்திரமாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மது குடிப்பது தொடங்கி தனது மகள் செல்போனில் பேசுவதை வரை எல்லாமே நாகமணிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. 13 வயதில் மகள் இருக்கின்ற நிலையில் கண்டவர்களுடன் இப்படி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் எப்படி ? என்று தட்டிக்கேட்ட தாயை, நதியா தர்ம அடி கொடுத்து வீட்டை விட்டு விரட்டி உள்ளார். தனது சகோதரி வீட்டில் தஞ்சம் அடைந்த நாகமணி, தனது மகள் நதியாவுக்கு தக்க பாடம் கற்பிக்கும் திட்டத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்து மகளுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார். சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

போதையில் படுக்கைக்கு சென்ற மகளின் தலையில் ஆட்டுக் கல்லை போட்டு கொலை செய்த நாகமணி காரமடை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். நாகமணியை கைது செய்த காவல்துறையினர் விரைந்து வந்து நதியாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள வசித்த அந்த வீட்டில் பல பகுதிகளிலும் மதுப்பாட்டில்களும், போதை வஸ்து பாக்கெட்டுகளுமாக சிதறிக்கிடந்தன.

இந்த கொலை சம்பவத்தால் நதியாவின் இரு குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெண்கள் போதையால் பாதை மாறி கூடா நட்பை தேடிக் கொண்டால் இறுதியில் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments