மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தே தீருவோம் : அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டம்

0 3695
மேகதாது அணைகட்டும் திட்டத்தை எதிர்த்தே தீருவோம் என தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைகட்டும் திட்டத்தை எதிர்த்தே தீருவோம் என தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளித்துள்ள துரைமுருகன், எந்த நிலையிலும் மேகதூதுவில் அணை கட்டுவதை தடுத்தே தீருவோம் என சொல்வதற்கு தமிழ்நாட்டிற்கும் உரிமை உண்டு என குறிப்பிட்டு உள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்பது போல கர்நாடகா நடந்து கொள்வதாக அறிக்கையில், அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தண்ணீர் தேசிய சொத்து என கூறியுள்ள துரைமுருகன், மத்திய அரசு இதை பார்த்துக் கொண்டு இருப்பது நல்லதல்ல என்றும், அண்டை மாநில உறவிற்கு இது உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments