கொரோனா பின்விளைவுகள்.... கவனம் தேவை... அக்கறை எடுத்தால் பிரச்சனை இல்லை
கொரோனா வைரஸ் பாதிப்பின் போதும், அதற்குப் பிறகும் ஒரு சிலருக்கு இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அத்துடன் ரத்தம் மென்மையான தன்மையில் இருந்து கடினமாகவும் மாற வாய்ப்புள்ளது. இதில் இருந்து விடுபடுவது குறித்த செய்தி தொகுப்பு.
மனித இனத்துக்கு சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ், பலரின் உயிரை பறித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு பின் குணம் அடைந்த பலர், அதற்குப் பிறகு, உடலில் அடுத்த கட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
இதில் முக்கியமாக, உடலில் ஏற்பட்ட வைரஸ் தாக்கம் காரணமாக, வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் போது இரத்தம் உறைந்து இருதயம் மற்றும் மூளைக்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அதீத பிரச்னைக்கு ஒருசிலர் ஆட்படுவதுண்டு என்கிறார் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர் நிவேதா.
இதுபோன்று பிரச்னை காரணமாக, 45 வயதுக்கு மேற்பட்ட பலர் மருத்துவமனையை நாடும் போது, இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை மருத்துவத்துறை உறுதி செய்துள்ளது. இரத்த ஓட்டம் மெலிதான தன்மையை இழந்து தடிமனான தன்மையாக மாறிவிடுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ள நிலையில், கொரோனாவின் பிந்தைய பாதிப்புகளை உணராமல் இருப்பது ஒருபோதும் நல்தல்ல என்கிறார் மருத்துவர் நிவேதா. உடலில் வைரஸ் பாதிக்கப்பட்ட போதும் பாதிப்புக்கு பின்னாலும், இரத்த அழுத்தம், இருதய பிரச்னை, நீரிழிவு உள்ளிட்டவற்றுக்கு மருத்துவர் பரிந்துரை பேரில் ஆஸ்பிரின், வெப்ரின், டபிகேட்ரன் போன்ற ஊசி, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் எதிர்ப்பு தன்மை அதிகரித்து, சுவாச பிரச்னை, ரத்தம் கடினமடைவது உள்ளிட்டவற்றில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Comments