விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு அனுமதி?
12 வயதுக்கு மேற்பட்டோருக்காக ஸைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. 3 ஆம் கட்ட சோதனையில் 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்பட்டது. 12 வயது மேற்பட்டவர்களுக்கும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
Comments