மெக்சிக்கோ சிட்டியில் கேபிள் பேருந்து சேவை அறிமுகம்..! மக்களிடையே பெரும் வரவேற்பு
மெக்சிகோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேபிள் பேருந்து ( cable bus) அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
90 லட்சம் மக்கள் வசிக்கும் மெக்சிகோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், துரிதமாக பயணம் மேற்கொள்ளவும் கேபிள் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குவாடெபெக் (Cuautepec) பகுதியில் சுமார் 9.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் இந்த கேபிள் பேருந்தின் ஒரு கேபினில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலால் 6 பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments