ரிச்சர்ட் பிரான்சனின் விண்வெளி சுற்றுப்பயண சோதனை வெற்றி : அடுத்த 10 ஆண்டுகளுக்கு விண்வெளி சுற்றுலாவை முன்னெடுக்கப்போவது யார் ?

0 3282

பிரிட்டிஷ் கோடீசுவரரும், விண்வெளி வீரருமான ரிச்சர்ட் பிரான்சன் மேற்கொண்ட தனியார் விண்வெளிப் பயணம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு விண்வெளி சுற்றுலாவை முன்னெடுக்கப்போவது யார் என்பதில் நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிச்சர்ட்  பிரான்சனுக்கு சொந்தமான  VSS Unity  என்ற விண்கலத்தில் அவர் உள்பட 6 பேர் விண்ணில் 85 கிலோமீட்டர் உயரத்திற்கு பயணம் செய்தனர்.

பூமியின் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் எடையில்லா வெற்றிடத்தில் 5 நிமிடம் இருந்து அந்த அனுபவத்தை பெற்ற பிறகு அவர்கள் பூமிக்கு திரும்பினர்.

வருகிற 20 ம் தேதி அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ், தனது New Shepard  என்ற விண்கலத்தில் தமது சகோதரர் உள்ளிட்டோருடன் இதே போன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், ரஷ்ய விண்வெளி நிறுவனம் உள்ளிட்டவர்களும்  இது போன்ற திட்டங்களை வைத்துள்ளனர். எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வர்த்தக திட்டத்தின் துவக்கமாக இவர்களின் இந்த பயணங்கள் கருதப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments