விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஜூனியர் இறுதி போட்டி : இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன் பட்டம்

0 3632
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஜூனியர் இறுதி போட்டி : இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன் பட்டம்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் நடந்த ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் சமீர் பானர்ஜி (Samir Banerjee) சக நாட்டை சேர்ந்த Victor Lilov-ஐ எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் சமீர் பானர்ஜி 7-க்கு 5, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பட்டம் வென்ற சமீர் பானர்ஜியின் தந்தை அசாம் மற்றும் தாய் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் 2009-ஆம் அண்டுக்கு பின் சர்வதேச தொடரில் இந்திய வீரர் ஒருவர் தனி நபர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments