இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

0 3608
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

ங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. Hove மைதானத்தில் நடந்த இவ்விரு அணிகளுக்கு 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 48 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணியில் அதிபட்சமாக தொடக்க வீராங்கனை Tammy Beaumont மட்டும் 59 ரன்கள் குவித்தார். 8 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டி20 தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments