சூரியனில் வீசும் புயலால் பூமியில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு..! -விஞ்ஞானிகள் தகவல்
சூரியனில் வீசும் புயலால் பூமியில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியை நெருங்கும் சூரியப் புயல் பூமியின் வெளிப்புற வளிமண்டலத்தை வெப்பமாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் செயற்கைக் கோள் இயக்கத்திலும் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பூமியின் காந்தப்புலம் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுவதால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.
Comments