ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு..!
ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்தாலோசனை நடத்துகிறார்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பி வந்ததும் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான முதல் சந்திப்பு இது. மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments