ஏழுமலையானை தரிசிக்க இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனை அறியாது பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மூலம் திருப்பதி வரும் பக்தர்களை,விஐபி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி சில ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் 2 பக்தர்களிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட்டுகளை வழங்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.ருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இதனை அறியாது பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மூலம் திருப்பதி வரும் பக்தர்களை,விஐபி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி சில ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் 2 பக்தர்களிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட்டுகளை வழங்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments