"டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4060
"டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல் என்றும் அதை தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஓடலாம் நோயின்றி வாழலாம் என்ற தலைப்பில் கிண்டி லேபர் காலனியில் முதல் மெரினா கடற்கரை வரை 21 புள்ளி 1 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையில்லாமல் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னை வந்துள்ள 5 லட்சம் தடுப்பூசிகளையும், இன்று வர உள்ள 3 லட்சம் தடுப்பூசிகளையும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments