ஆப்கான் உள்நாட்டு யுத்தத்தில் தாலிபன்களுடன் இணைந்த பாக்.தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் ராணுவப் படையினருக்கு எதிரான தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் யுத்தத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களும் இணைந்துள்ளன.
இந்தியா அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில் தாலிபனுக்குத் துணையாக லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் ஆப்கான் உள்நாட்டு யுத்தத்தில் இறங்கியுள்ளன.
ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் 200 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து குனார், நங்கஹார் போன்ற மாகாணங்களில் யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகளும் இருப்பதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாலிபன் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உளவு அமைப்பினர், ராணுவ உதவியுடன் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Comments