தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

0 2962
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கீழ்வேளூரில் அமைந்துள்ள அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய சேகர்பாபு, தமிழக கோவில்களில் கொள்ளை போன சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாகவும், மத்திய அரசின் உதவியுடன் அவை மீட்கப்படும் என்றும் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென சிறிய மண்ணுளிப் பாம்பு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments