கோவிட் 19 முழுவதுமாக ஒழிந்துவிடவில்லை, எச்சரிக்கை தேவை - WHO தலைமை விஞ்ஞானி அறிவுறுத்தல்
கோவிட் 19 நோய்த் தொற்று முற்றிலுமாகத் தணிந்து விடவில்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இயக்கத்தால் சில நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற போதும், ஆக்சிஜன் படுக்கைத் தட்டுப்பாடுகள், தடுப்பூசித் தட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 5 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையும், 9 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு நாடுகளின் அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வேளையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் சௌம்யா சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
Comments