சீனா உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு : 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட அதிநவீன செயலிகள்

0 3805
சீனா உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு : 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட அதிநவீன செயலிகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அதிநவீன செயலிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் செயலிகளை தங்களே வடிவமைத்துக்கொள்ள உதவும் அதிநவீன செயலி மற்றும் ஓட்டுநரின்றி தானியங்கி முறையில் வாகனங்களை இயக்கும் செயலி பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

அடுத்தாண்டு பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்காலப் போட்டிகளின் போது காயமடையும் வீரர்கள் குறித்து எச்சரிப்பது முதல், 10 கிலோமீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது வரை பல்வேறு அதிநவீன சென்சார்கள் மற்றும் கேமராக்களை கட்டுப்படுத்தும் செயலிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments