தனுஷ் படத்திலிருந்து கார்த்திக் நரேன் விலகியதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியீடு
நடிகர் தனுஷின் 43ஆவது படத்தை இயக்கும் இயக்குநர் கார்த்திக் நரேன் அப்படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டதாக வெளியான தகவலுக்கு, மறுப்பு தெரிவிக்கும் விதமாக இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும், இயக்குநர் சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தனுசே படத்தை இயக்கி வருவதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக படபிடிப்பு தளத்தில் நடிகர் தனுசும், கார்த்திக் நரேனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
Comments