ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க உயரமான இடத்தை தேடும் மாணவர்கள் : செல்போன் டவர்கள் இல்லாததால் சிக்னல் கிடைக்காத அவலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் டவர் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் சிக்னலுக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறும் நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
காளிங்காவரம் ஊராட்சிக்கு உட்பட்ட மட்டம்பள்ளி, அக்ரகாரம், கொடித்திம்மனப்பள்ளி, ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு செல்போன் டவர்கள் இல்லாததால், சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் உயரமான கட்டிடங்கள் மீதும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீதும் ஏறுவதாக கூறுகின்றனர்.
நெட்வொர்க் இல்லாததால், இங்குள்ள வங்கி, தபால் நிலையம், இ.சேவை மையம் உள்ளிட்டவையும் சரிவர இயங்குவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Comments