பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-டெல்லி உயர்நீதிமன்றம்
அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என அரசமைப்புச் சட்டத்தின் 44ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கை, வெறும் நம்பிக்கையாகவே போய்விடக் கூடாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மதம், ஜாதி போன்றவற்றால் பாரம்பரியமாக ஏற்படும் தடைகள் மெல்ல மெல்ல மறைந்து, ஒரே சீரான சமூகமாக நவீன இந்திய சமூகம் பரிணமித்து வருவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
திருமணம், விவாகரத்து தொடர்பான வெவ்வேறு வகையான குடும்ப சட்டங்களால், மக்கள் அலைக்கழிப்புகளுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆளாகக் கூடாது என்றும், ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்கள் அத்தகைய சிக்கல்களுக்கு தற்போது ஆளாகி வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
Comments