கட்சி நிர்வாகிக்கு அறை கொடுத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்
கட்சி நிர்வாகி ஒருவரை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் பொதுவெளியில் அறையும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மாண்டியாவில் சிவக்குமாருடன் நடந்து வந்த காங்கிரஸ் நிர்வாகி, சிவகுமாரின் தோளில் கை போட முயன்ற போது அவரை ஒரு அறை அறைந்தார். அத்துடன் அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு ஒளிப்பதிவாளர்களையும் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
கட்சியினரை அறைவது சிவகுமாருக்கு புதிதல்ல. கடந்த 2017ல் அவர் அமைச்சராக இருந்த போது செல்பி எடுக்க முயன்றவரை அடித்தது, 2018 ல் பெல்லாரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவருடன் செல்பி எடுக்க முயன்றவரை அடித்தது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தளள்ன.
Comments