ரஷ்யாவில் இருந்து ரேன்சம்வேர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ரஷ்யாவில் இருந்து கொண்டு, அமெரிக்க நிறுவனங்களின் கணினிகளை குறிவைத்து ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தும் சைபர்கிரிமினல்களை ஒடுக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் கணினியில் புகுந்தால், தகவல்களை மீட்க முடியாதபடி என்கிரிப்ட் செய்துவிடும். மென்பொருளை பரப்பிய ஹேக்கர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் மட்டும் தகவல்களை மீட்க முடியும்.
பல அமெரிக்கா நிறுவனங்கள் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள ஹேக்கர்கள், அரசுக்கு தெரிந்தே இந்த வேலையை செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹேக்கர்களுக்கும் ரஷ்ய அரசுக்கும் தொடர்பில்லை என்றாலும், அங்கிருந்து சைபர்தாக்குதல்கள் நடத்தப்படுவதால், ரஷ்ய அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Comments