அரசுக்கு எதிராக சதி செய்ததாக சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரி ஜி.பி.சிங் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

0 3877
அரசுக்கு எதிராக சதி செய்ததாக சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரி ஜி.பி.சிங் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

அரசுக்கு எதிராகச் சதிசெய்ததாகக் கூறிச் சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரி மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் காவலர் பயிற்சிக் கல்லூரித் தலைவராக இருந்த ஜி.பி.சிங் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது.

இதையடுத்து அவருக்குச் சொந்தமான 15 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் ஜூலை 1 முதல் 3 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட காகிதங்களில் அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் சொற்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜூலை 5 முதல் ஜி.பி.சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments