இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களில் கட்டுப்பாடு ; உத்தரபிரதேச அரசு

0 3051
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களில் கட்டுப்பாடு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை கட்டுப்படுத்துதல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆகிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

அதே நேரம் நாம் இருவர் நமக்கு இருவர் திட்டத்தை ஏற்பவர்கள் அரசுப் பணியில் இருந்தால் கூடுதலாக இரண்டு இன்கிரிமென்டுகள் வழங்கப்படும், மானிய விலையில் வீடு, நிலம் வாங்க உதவி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments