தொகுதி மறுவரையறை 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் ; சுஷில் சந்திரா

0 1845
தொகுதி மறுவரையறை 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும்

ஜம்மு காஷ்மீரில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் தொகுதி மறுவரையறை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1981 ஆம் ஆண்டு முதன் முறையாக முழு அளவிலான மறு வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் அது 14 ஆண்டுகள் கழித்து தனது பரிந்துரையை 1995 ஆம் ஆண்டு தாக்கல் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

2011 ஆம் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்வதற்காக கடந்தாண்டு மறுவரையறை ஆணையம் கூட்டப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை மேற்கொள்ள காஷ்மீருக்கு வந்த தேர்தல் ஆணையக்குழுவினர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments