கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவே இல்லை ; நிபுணர்கள் எச்சரிக்கை

0 2317
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவே இல்லை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரமாக இருக்கிறது. இது மிகச்சிறிய எண்ணிக்கையே அல்ல. ஆனால் கடந்த கால பாதிப்புகள் மிக அதிகமாக இருந்ததால் இது சிறிதாகத் தெரிகிறது என்று டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் , உத்தரகாண்ட் போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் பெரும் கூட்டமாகத் திரள்வதுக் குறித்தும் கொரோனா முடிந்துவிட்டதாக எண்ணி முகக்கவசம் இல்லாமல் திரிவது குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறினார்.

பிரயாக்ராஜ், ஹரிதுவார் போன்ற இடங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி நடமாடுவதாகவும்,சுற்றுலா முடிந்து திரும்புகிறவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கலாம் என்றும் வி.கே.பால் விளக்கம் அளித்தார்.கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவே இல்லை என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments