ஜிகா வைரஸ் உறுதியான கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு ; பொது சுகாதாரத்துறை
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.
கேரளாவில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை தணிக்கை செய்வது, ஏடிஸ் கொசு உற்பதியாவதை தடுப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முடுக்கிவிட்டு உள்ளது.
மேலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் தாமாக முன் வந்து சிகிச்சை பெற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Comments