கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து 4 முதல் 6 வாரங்களில் முடிவெடுக்கப்படும்
இந்தியாவில் தயாராகும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சினை தயாரித்து வருகிறது.அது அவசர காலப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காததால் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.இதுவரை எட்டு தடுப்பூசிகளுக்கு மட்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments