பெரிய ஆள் ஆன பிறகு தான் வீடு திரும்புவோம் ; வீட்டை விட்டு வெளியேறிய குட்டீஸ்
கரூரில் பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையத்தில் நின்றிருந்த 4 சிறார்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வெங்கமேடு ரொட்டி கடை தெருவில் வசிப்பவர்கள் மனோகரன், சண்முகராஜா குடும்பத்தினர். இதில் மனோகரின் 9 வயது மகனும், 3 வயது மகளும், சண்முக ராஜாவின் 9 மற்றும் 5 வயதான இரு மகன்களும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகினர்.
இதையடுத்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கரூர் ரயில் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு நின்றிருந்த சிறார்களை விசாரித்துள்ளனர். அப்போது, தாங்கள் விளையாடினாலும், டிவி பார்த்தாலும் பெற்றோர் திட்டுவதாகவும், எனவே, வெளியூர் சென்று பெரிய ஆள் ஆன பிறகு வீடு திரும்பலாம் என புறப்பட்டு வந்ததாக அப்பாவியாக கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
Comments