பஞ்சாப்பில் ஊரடங்கு ரத்து ; மது பார்கள், திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
உள்அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேரும், திறந்த வெளி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேரும் கலந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மது பார்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments