சாலை விபத்தில் சிக்கி வலியால் துடித்த இளைஞர்; வேஷ்டியை கிழித்து கட்டுப்போட்டு முதலுதவி அளித்த டாக்டர் எம்.எல்.ஏ

0 4070

விழுப்புரத்தில் சாலை விபத்தில் சிக்கி கால் முறிவுற்று வலியால் துடித்த இளைஞருக்கு, மருத்துவரான திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் வேஷ்டியை கிழித்து கட்டுப்போட்டு முதலுதவி அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.

பனங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞர், பைக்கில் வந்து கொண்டிருந்த போது ராகவன்பேட்டை அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

கால் முறிவுற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த இளைஞரைக் கண்டு அவ்வழியாக வந்த விழுப்புரம் எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன், இளைஞரை ஆறுதல்படுத்தி, கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

கட்டுப்போட துணிகள் ஏதும் இல்லாத நிலையில், காரில் மாற்றுத் துணியாக வைக்கப்பட்டிருந்த தனது வேஷ்டியை கிழித்து கட்டுப்போட்டார்.

தொடர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து இளைஞரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments