சாம்சங் அலுவலகங்களில் வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தொலைத்தொடர்பு வலையமைப்புக் கருவி இறக்குமதியில் சுங்க வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் சாம்சங் அலுவலகங்களில் மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு 4ஜி தொலைத்தொடர்பு வலையமைப்புக் கருவிகளை வழங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியா, தென்கொரியா இடையே உள்ள தடையற்ற வணிக உடன்பாட்டின்படி சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஐரோப்பாவின் எரிக்சன், நோக்கியா, சீனாவின் ஹுவேய், இசட் டி இ நிறுவனங்கள் 20 விழுக்காடு சுங்க வரி செலுத்துகின்றன.
பிற நாடுகளில் தயாரித்த கருவிகளைத் தென்கொரியா வழியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்து சாம்சங் நிறுவனம் சுங்கவரி ஏய்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையிலும், டெல்லி குர்கானிலும் சாம்சங் அலுவலகங்களில் புதனன்று வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
Comments