புதிய தடுப்பணைகள், நீர்நிலைகளை உருவாக்க முன்னுரிமை ; அமைச்சர் துரைமுருகன்

0 2561
புதிய தடுப்பணைகள், நீர்நிலைகளை உருவாக்க முன்னுரிமை ; அமைச்சர் துரைமுருகன்

நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளத் தணிப்பு, தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிட முன்னுரிமை வழங்கி, திட்ட மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments