மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வரும் 12ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

0 2970

மேகதாது அணைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணைப் பிரச்சினை குறித்துக் கலந்தாலோசிக்க அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 12ஆம் நாள் திங்கட்கிழமை நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை பத்தரை மணிக்கு நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments