சென்னை பெரியமேட்டில் அடுத்தடுத்து 2 தங்கும் விடுதிகளுக்குள் புகுந்து திருட்டு... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

0 3406

சென்னை பெரியமேட்டில் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள தங்கும் விடுதிகளை குறிவைத்து ஒரு வாரகாலமாக கைவரிசை காட்டி வரும் கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

ராயல் ஸ்டார் என்ற தங்கும் விடுதிக்கு அதிகாலையில் வந்த கொள்ளையன், கல்லாப்பெட்டியை ஸ்குரு ட்ரைவர் வைத்து திறக்க முயன்றான். சத்தம் கேட்டு விடுதி ஊழியர் வந்து திருடனை பிடிக்க முயன்ற நிலையில், மாடி வழியாக அவன் தப்பிச் சென்றுள்ளான்.

இந்த சம்பவத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள மெர்ஹபா பேலஸ் என்ற மற்றொரு தங்கும் விடுதியிலும் பணம் திருடப்பட்டுள்ளது. ஊழியர்கள் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து உள்ளே வரும் கொள்ளையன், செல்போனை திருடினால் சிக்னலை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள் என எண்ணி, பணத்தை மட்டும் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments