கோவாக்சின் தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகள் நன்றாக உள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு தகவல்
கோவாக்சின் தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகள் நன்றாக உள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளதால், அதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், கோவாக்சின் தடுப்பு மருந்தின் ஒட்டுமொத்தச் செயல்திறன் மிகவும் அதிகம் என்றும், டெல்டா வகைத் தொற்றுக்கு எதிரான செயல்திறன் சற்றுக் குறைவு என்றாலும் மோசமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சோதனைத் தரவுகள் நன்றாக உள்ளதாகவும், உலகப் பொது சுகாதார முகமையின் பாதுகாப்பு வரையறைக்கு உட்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஒப்புதல் கிடைப்பதற்கான அறிகுறி எனக் கூறப்படுகிறது
Comments