கனமழையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

0 4158

திருப்பத்தூர் மாவட்டம்Vaniyambadi அருகே பாலாற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக புல்லூரில் ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அம்பலூர் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உதயேந்திரம், மேட்டுப்பாளையம் பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 5 ஆண்டுகளுக்குப் பிறகு வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் கரை புரள்வதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments